News July 7, 2025
அம்மன் சென்டிமென்ட்.. ஆட்டத்தை தொடங்கும் இபிஎஸ்!

2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகிறார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற வனபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் இபிஎஸ் இன்று மட்டும் 62 கி.மீ பயணம் செய்ய உள்ளார்.
Similar News
News July 7, 2025
ராட்சசன் 2 உறுதி: விஷ்ணு விஷால்

தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடிப்பதாகக் கூறிய விஷ்ணு விஷால், அடுத்த ஆண்டு ‘ராட்சசன் 2’ படமும் வருவதாக உறுதியளித்துள்ளார். இது அப்படத்தின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 2018-ல் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் தற்போதுவரை ரசிக்கப்படுகிறது. குறிப்பாக, வில்லன் ரோல் & த்ரில்லிங் காட்சிகள் கொண்டாடப்படுகிறது. அதேநேரம், கட்டா குஸ்தி படமும் பெஸ்ட் எண்ட்ர்டெய்னராக அமைந்தது.
News July 7, 2025
சர்வதேச அளவிலும் கெத்து காட்டும் MI, Super Kings

நடந்துமுடிந்த 2025 IPL சீசனில் முதல் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியடைந்தாலும் எலிமினேட்டர் சுற்றுக்கு MI தகுதி பெற்றது. அதேபோல், மேஜர் கிரிக்கெட் லீக்கிலும் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற MI நியூயார்க் அணி எலிமினேட்டருக்கு தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், சூப்பர் கிங்ஸ் அணியும் IPL, MLC & SA20 லீக்குகளின் முதல் 3 சீசன்களிலும் <<16886368>>Playoff<<>>-க்கு தகுதி பெற்றது.
News July 7, 2025
இறங்குமுகத்தில் தங்கம் விலை!

ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. கடந்த வாரம் சவரனுக்கு ₹1,520 அதிகரித்த நிலையில் இந்த வார தொடக்கமே <<16974093>>இறக்கத்துடன்<<>> ஆரம்பித்துள்ளது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிந்து வருவதோடு, இந்திய பங்குச்சந்தைகளும் பெரிதாக மாற்றமின்றி நிலையாக இருப்பதே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,010-க்கும், சவரன் ₹72,080-க்கும் விற்பனையாகிறது.