News December 20, 2024

சென்னையில் அம்மா உணவகங்கள் தற்காலிக மூடல்?

image

சென்னையின் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகளுக்காக 2 வாரங்களுக்கு அம்மா உணவகங்களை மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 300க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள நிலையில், அதில் முதல்கட்டமாக 15 மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மூடப்படும் உணவகங்களில் இருந்து 1 கி.மீ. தொலைவில் 1 உணவகத்தை திறந்து வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Similar News

News March 5, 2026

மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. அதிர்ச்சி

image

OPS திமுகவில் இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்த Ex MLA மற்றும் MP-யான வெ. ஏழுமலை, 2 நாளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.பி.பாலாஜி, முன்னாள் அமைச்சர் T.ராமசாமி மகன் T.R.சீனிவாசன், ராமநாதபுரம், தேனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் EPS-ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

News March 5, 2026

நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

image

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.

News March 5, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!