News June 14, 2024
புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்

சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பித்து, ருசியான புதிய உணவுகளை வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ₹5 கோடி செலவில் அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது . அதன்படி, சுமார் 391 அம்மா உணவகங்களில் பழுதான சமையலறைப் பொருட்கள் மாற்றப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட உள்ளது. திமுக ஆட்சியில் அம்மா உணவகம் மூடப்படும் அவலத்தில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
OPS நீங்கள் இப்படி செய்யலாமா? புகழேந்தி

மூன்று முறை CM ஆக இருந்த OPS திமுகவில் இணைந்து பெரிய தப்பு செய்துவிட்டார் என அவரது ஆதரவாளராக இருந்த புகழேந்தி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், OPS அண்ணா.. எத்தனை முறை அண்ணா என்று அழைத்திருப்பேன்… யாரு வேண்டுமானாலும் போயிருந்திருக்கட்டும்.. ஆனால் நீங்கள் போயிருக்கலாமா என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். தன்னை நம்பி இருந்தவர்களை OPS நடு ஆற்றில் விட்டுவிட்டார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 2, 2026
ராசி பலன்கள் (02.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 2, 2026
சீட்களை உயர்த்த தவெகவை பயன்படுத்துகிறதா காங்கிரஸ்?

கூட்டணி சலசலப்புக்கு இடையே திமுகவுடன் செல்வப்பெருந்தகை தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகும் <<19272775>>திமுக ஆஃபர் செய்த 25 தொகுதிகளை ஏற்க முடியாது<<>> என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். அத்துடன் தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது; காங்., பலத்தை தவெக அறிந்துள்ளது என்றும் பேசியுள்ளார். இது சீட்களை உயர்த்துவதற்கான காங்கிரஸின் ஸ்ட்ரேட்டஜி என்கிறார்கள் விமர்சிகர்கள்.


