News April 11, 2024
சிவகங்கையில் அமித் ஷாவின் சாலைப் பேரணி ரத்து

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சிவகங்கையில் நாளை மேற்கொள்ள இருந்த சாலைப் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் தேவநாதனை ஆதரித்து நாளை அமித் ஷா சாலைப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பேரணி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
Similar News
News April 4, 2026
கிட்னி திருட்டில் நடிகை ஜூலிக்கு தொடர்பா?

தமிழகத்தை உலுக்கிய கிட்னி மோசடியில் நடிகை ஜூலிக்கும் தொடர்புள்ளதாக திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஜூலி, அவரது கணவர் முகமது இக்ரீம், தோழி சர்மிளா ஆகியோர் இந்த திருட்டு நெட்வொர்க்கில் உள்ளவர்கள் தான் என்றும் அவர் ஊடக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட இருவர் அளித்த ஆதாரங்களையும் கோர்ட் நியமித்த குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News April 4, 2026
தமிழக அரசியலில் மீண்டும் தடம் பதிக்கும் ‘வேல்’

திருச்செந்தூரில் உள்ள முருகனின் வேல் திருடு போய்விட்டது என்ற புகாருக்கு, அப்போதைய CM எம்ஜிஆருக்கு எதிராக கருணாநிதி மேற்கொண்ட நடைபயணத்திலேயே தமிழக அரசியலில் வேலின் பயணம் தொடங்கிவிட்டது எனலாம். 2010 காலகட்டத்தில் முப்பாட்டன் முருகன் என மீண்டும் அரசியல் களத்தில் வேலை நாட்டினார் சீமான். இந்நிலையில், 2026 பிரசாரத்தில் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வேல் கொடுக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
News April 4, 2026
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் விஜய் விலகினார்

EX அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான Dr.விஜய், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக WAY2NEWS-க்கு பேசிய அவர், வேலூர் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் சிலரின் சதியால் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார். அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து உழைத்த உழைப்புக்கு பலனில்லை என்பதால் வெளியேறுவதாகவும் கூறினார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


