News April 20, 2025
அமித் ஷாவின் ஹெல்த் டிப்ஸ்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணா!

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா, சில ஹெல்த் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேர தூக்கத்தை கடைபிடைத்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக இதை ஃபாலோ செய்து உடல் எடை, சர்க்கரை நோயில் இருந்து மீண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் எந்த மாத்திரைகளையும் எடுத்து கொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News November 26, 2025
சென்னை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

சென்னை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.
News November 26, 2025
யார் இந்த பொல்லான்?

ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி கரையோர போர்(1801), சென்னிமலை போர்(1802), அரச்சலுார் போர்(1803) ஆகியவற்றில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான்தான் முக்கிய காரணம். ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவிய பொல்லான் தந்திரங்களை அறிந்து, சின்னமலையை வெற்றிபெற வைத்தார். சிறந்த வாள்வீச்சு வீரராக திகழ்ந்த பொல்லான், 1805-ல் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


