News September 4, 2025

அதிமுகவை விமர்சிக்க கூடாது: அமித்ஷா போட்ட கண்டிஷன்

image

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது எலியும் புலியுமாக இருந்த அதிமுக பாஜக, சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைந்துள்ளது. இரு கட்சிகளும் ஒன்றிணைந்தது போல் வெளியில் தோன்றினாலும், இன்னும் ஆங்காங்கே சலசலப்பு காணப்படுகிறது. இதனிடையே நேற்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா, பொதுவெளியில் அதிமுகவினரை விமர்சிக்க கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 20, 2026

கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

கத்தாரின் <<19423057>>எரிசக்தி நிறுவனங்கள்<<>> மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கத்தார் PM ஷேக் தமிம் பின் ஹமாத்திடம் அவர் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அப்போது, அங்குள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறிய PM மோடி, அப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலவ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

News March 20, 2026

தண்ணீருக்கு போர் போட கிடைத்த ஃப்ரீ கேஸ் கனெக்‌ஷன்!

image

கிணறு வெட்ட போய், பூதம் கிளம்பியது என்பார்கள். அப்படித்தான் இவர்களுக்கு கேஸ் கனெக்‌ஷன் கிடைத்துள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த ரத்தினம்மா, கடந்த 2011-ல் தண்ணீருக்காக Bore போட்டுள்ளார். தண்ணீர் வராததால், குழாயை மூடும் போது மீத்தேன் வாயு இருப்பது தெரியவந்தது. அந்த கேஸ் கனெக்‌ஷனை கிச்சனுக்கு லைன் கொடுத்து, 10 ஆண்டுகளாக ரத்தினம்மா குடும்பம் சமைத்து வருகிறது. இதனால், ஆண்டுக்கு ₹10,000 சேமிக்கிறார்களாம்.

error: Content is protected !!