News May 13, 2024

ராகுல் காந்திக்கு அமித் ஷாவின் 5 கேள்விகள்

image

1.முத்தலாக் முறையை திரும்ப கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறதா? 2.பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டுமா?கூடாதா? 3.இந்தியாவின் துல்லிய தாக்குதல்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? 4.அயோத்தி ராமர் கோயிலுக்கு ராகுல் காந்தி ஏன் செல்லவில்லை? 5.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவை நீக்கியதை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 7, 2026

FLASH: மதுரை 1 லட்சம் ஓபிஎஸ் அணி திமுகவில் இணைப்பு…!

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் சற்று நாட்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் தனது 1 லட்சத்திற்கு மேற்பட்ட ஆதராவாளர்களை திமுகவில் இணைக்கும் நிகழ்வு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்.

News March 7, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

image

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

News March 7, 2026

மகளிர் வங்கி கணக்கில் ₹15,000.. அதிரடியாக அறிவித்தார்

image

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய்மார்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணத்தின்போது பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டு சேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!