News March 28, 2024
தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் அமித்ஷா

தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார். ஏப். 4ஆம் தேதி தமிழகம் வரும் அவர், மதுரை மற்றும் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதனை தொடர்ந்து ஏப். 5ஆம் தேதி தென் சென்னையில் தமிழிசையை ஆதரித்து அவர் பரப்புரை செய்ய உள்ளார். ஏப். 19க்கு முன்பாக, பிரதமர் மோடி தமிழகத்தில் மீண்டும் பரப்புரை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 2, 2026
நேற்று வந்தது இன்று போனது.. ₹10 லட்சம் கோடி காலி!

பங்குச்சந்தை நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில், இன்று ஒரே அடியாக சரிந்துள்ளது. சென்செக்ஸ் 1,489 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 71,644 புள்ளிகளிலும், நிஃப்டி 468 புள்ளிகள் சரிந்து 22,211 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Sun Pharma, Eternal, SBI, Reliance நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவில் உள்ளன. நேற்று முதலீட்டாளர்கள் ₹10 லட்சம் கோடி லாபம் அடைந்த நிலையில், இன்று அதே அளவு காலியாகியுள்ளது.
News April 2, 2026
மோசடிகளின் மொத்த உருவம் திமுக அரசு: அன்புமணி

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் 3 மாதங்களாகியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். அதேபோல் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வும் கிடைக்காமல் ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த இரு திட்டங்களும் நடைமுறைக்கு வராததற்கு அரசின் எண்ணமும், சதியும் தான் காரணம்; மோசடிகளின் மொத்த உருவமாக திமுக அரசு திகழ்வதாக அவர் சாடியுள்ளார்.
News April 2, 2026
தந்தை – மகன் போட்டி உருவாகுமா?

ராமதாஸ் தரப்பில் பென்னாகரம் தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சிட்டிங் MLA ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்.,கில் இணைந்த நிலையில், அவரே அங்கு போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் மகனை எதிர்த்து களமிறங்குவதா என ஜி.கே.மணி யோசிப்பதால், அத்தொகுதியில் வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன முடிவெடுப்பார் ராமதாஸ்?


