News September 3, 2025
தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசித்தார். அப்போது தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுவது நல்லதல்ல என்றும், தேர்தலுக்கு முன் இதை சரிசெய்ய வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். அண்ணாமலையை மாற்றியதில் இருந்து சலசலப்பு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 5, 2025
செங்கோட்டையன் சொன்ன முதல் வார்த்தை!

1972-ல் கிளைச் செயலாளராக பணியை தொடங்கிய தன்னை 1975-ல் பொருளாளராக நியமித்து அழகு பார்த்தவர் MGR என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், MGR, ஜெயலலிதா காலத்தில், தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
News September 5, 2025
RECIPE: கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ‘சாமை இட்லி’

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் என பல நன்மைகளை சாமை அரிசி வழங்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*சாமை அரிசியையும், உளுந்தையும் தனிதனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
*இரண்டையும் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
*அரைத்த மாவை சில மணிநேரம் புளிக்க வைத்து, இட்லி செய்தால், ஆவி பறக்க பறக்க சாமை இட்லி ரெடி. SHARE IT.
News September 5, 2025
FLASH: ரோடு ஷோ நடத்திய செங்கோட்டையன்

கோபியில் இன்னும் சற்று நேரத்தில், செய்தியாளர்களை சந்திக்க உள்ள செங்கோட்டையன் பிரமாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அவரது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் வரை, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களில் EPS படம் இடம் பெறவில்லை. செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.