News April 11, 2025
அமித்ஷா சென்னை வருகை..

இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவையை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவரை சந்திக்க உள்ளதால் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வரலாம்.
Similar News
News November 7, 2025
புன்முறுவல் அரசியே மானஸா!

தெலுங்கு வரவான மானஸா செளத்ரி, ‘ஆர்யன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தடம் பதித்துள்ளார். பயண ஆர்வலரான இவர், சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில் கேஷுவலாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மானசா SM-ல் பதிவிட்டுள்ள நிலையில், அவரது புன்முறுவலுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆகியுள்ளனர். கனவு கன்னியாக மாறப் போகும் மானஸாவின் போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.
News November 7, 2025
இந்த 8 விஷயங்கள் இருந்தா நீங்களும் ஜெயிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைப்பிடியுங்க. ➤இலக்கில் தெளிவு / கவனம் ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
News November 7, 2025
பிஹாரில் NDA -க்கு சாதகமான நிலை: விஷால் சூசகம்

பிஹார் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்ப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் வலுவாக தெரிவதாகவும், அது பிஹாரின் எதிர்கால நலனுக்கு மிக முக்கியம் என்றும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். 60% மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது NDA-வுக்கு சாதகமான மனநிலையை காட்டுவதாக விஷால் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும் என்று கூறியுள்ளார்.


