News April 16, 2025
வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
கடன்கள் தள்ளுபடி… அரசு வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ₹6.15 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என பார்லிமென்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை வசூலிக்க முடியாமல் போகும் கடன்கள் வங்கி பதிவுகளில் இருந்து நீக்கப்படும். இதற்கு, லோன் காசை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது அர்த்தமல்ல. வங்கிகள் தொடர்ந்து இக்கடன்களை திரும்பப் பெற முயற்சிகள் எடுக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
IPL 2026 ஏலத்துக்கு வரப்போகும் வீரர்கள் இவர்களே

2026 IPL ஏலத்திற்கான வீரர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 77 இடங்களுக்கு, 240 இந்திய வீரர்கள், 110 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். கான்வே, சர்ஃபராஸ் கான், மில்லர், பிரித்வி ஷா, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரச்சின், டீ காக், தீக்ஷனா உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கான ஏலம், டிச.16-ம் தேதி அபுதாபியில் நடக்கவிருக்கிறது.
News December 9, 2025
மிக அழகான பெண்களை கொண்ட 10 நாடுகள்!

அழகு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கண்ணோட்டத்தை பொறுத்தது. இருப்பினும் பண்பாடு, பெண்களின் தோற்றம், உடற்தகுதி, வாக்கெடுப்பு என பல்வேறு காரணிகளை கொண்டு அழகான பெண்கள் அதிக உள்ள நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் எதுன்னு தெரியுமா? மேலே SWIPE பண்ணி பாருங்க.


