News October 8, 2025
அமித்ஷா ஆக்டிங் PM ஆக செயல்படுகிறார்: மம்தா

அமித்ஷா ஒரு ஆக்டிங் PM போன்று செயல்படுவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது மோடிக்கும் தெரியும் என்ற அவர், அமித்ஷாவை நம்பாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஒருநாள் அமித்ஷா ‘மீர் ஜாபராக’ மாறுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீர் ஜாபர் என்பவர், வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர். 18-ம் நூற்றாண்டில் பிளாசி போரில் ஆங்கிலேயர்களிடம் நவாப் சிராஜ் உத் தெளலாவை காட்டிக் கொடுத்து மன்னரானார்.
Similar News
News October 9, 2025
Cinema Roundup: ‘பைசன்’ படத்திற்கு U/A சான்று

*துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *தெலுங்கில் ‘பைசன்’ படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. *துல்கர் சல்மானின் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ₹3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல். * கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ அக்.23-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்.
News October 9, 2025
20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
News October 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.