News April 30, 2025

சென்னை வரும் அமித்ஷா.. பாஜகவுக்கு 40 சீட்?

image

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில் மே 3-ல் மீண்டும் அவர் சென்னை வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, தொகுதி பங்கீட்டில் 40 சீட் வரை அதிமுகவிடம் கேட்பது குறித்தும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News December 1, 2025

பஸ் விபத்தை தடுக்க ஓட்டுநர், நடத்துநருக்கு டிரெய்னிங்!

image

<<18436984>>காரைக்குடி, மாமல்லபுரத்தில்<<>> அரசு பஸ் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய நிலையில், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விபத்தை தடுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். TNSTC-ல் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து கூடுதலாக வேலை வாங்குவதே விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனை மறுத்துள்ள அமைச்சர், விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

News December 1, 2025

இரும்பு கம்பியை சொருகியது போல் வலி: திருமா உருக்கம்

image

கட்சியின் வளர்ச்சிக்காக, தாங்க முடியாத உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக முட்டி வலி, கால் வலி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கழுத்தில் இருந்து இடுப்பு வரை இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் உள்ளதாக உருக்கத்துடன் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

News December 1, 2025

இந்து மதத்தில் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை!

image

‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ என்றவுடன், இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளது என்றே பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் கோடி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கோடி(Crore) & வகை என அர்த்தங்கள் வரும். இந்த ‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ வாக்கியத்தில் வகை அர்த்தம்தான் சொல்லப்படுகிறது. 33 தேவர்கள் அதாவது, 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் & பிரஜாபதி ஆகியோர் அடங்குவர்.

error: Content is protected !!