News April 21, 2024
அமித் ஷா பிரசார பயணம் ரத்து

மோசமான வானிலை காரணமாக அமித் ஷாவின் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 2அம் கட்டத் தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக டார்ஜிலிங் பகுதியில் அமித் ஷா பரப்புரை மேற்கொள்வதாக இருந்த நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
Similar News
News February 4, 2026
நெல்லையப்பர் கோயிலில் தீண்டாமை? நிர்வாகம் மறுப்பு

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலின் சமபந்தி விருந்தில் நரிக்குறவர் இன சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், இவை வெறும் வதந்தி என கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விருந்தில் எந்த சமூகத்தையோ, இனத்தையோ சேர்ந்தவர்களையும் புறக்கணிக்கவில்லை என விளக்கமளித்து, நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு உணவு வழங்கவில்லை என்ற புகாரை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
News February 4, 2026
தமிழ் இசையமைப்பாளர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘பூவுக்குள் பூகம்பம்’ படம் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் (எ) சங்கீத ராஜன் (70) காலமானார். ‘முனி’, ’சினேகிதி’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்த இவர், கடந்த சில நாள்களாக நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று போரூர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
News February 4, 2026
கிரிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றங்கள்

கிரிக்கெட் விதிகளை வகுக்கும் MCC விதிமுறைகளில் 73 மாற்றங்களை அறிவித்துள்ளது. *டெஸ்ட்டில், ஒரு நாளின் கடைசி ஓவர் வீசப்படும்போது விக்கெட் விழுந்தாலும், அந்த ஓவரை முழுமையாக முடிக்க வேண்டும். *ரன் எடுப்பதைத் தடுக்க (அ) ரன்-அவுட் செய்ய பந்தை ஸ்டம்பை நோக்கி எறியும்போது அது தவறிச் சென்றால் மட்டுமே ஓவர்த்ரோ எனக் கருதப்படும். Misfield செய்தால் அதில் சேராது. இந்த விதிமுறைகள் அக்., முதல் அமலுக்கு வரும்.


