News March 18, 2024
அமித் ஷாவும் நானும்; மனம் திறந்த சந்தான பாரதி

அமித் ஷா பெயரை முதலில் கேட்டதும் அவரும் ஒரு நடிகர் என்று தான் நினைத்ததாக சந்தான பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அமித் ஷா பிறந்தநாளுக்கு என் புகைப்படத்தை போட்டு சிலர் வாழ்த்து தெரிவித்ததை பார்த்தேன். அவர்களுக்கு நான் யாரென்று தெரியவில்லையா? அமித் ஷா புகைப்படம் கிடைக்கவில்லையா எனத் தெரியவில்லை. முதலில் இதை பார்த்து என்ஜாய் செய்தேன். தற்போது அந்த மாதிரி நடப்பதில்லை என்றார்.
Similar News
News February 10, 2026
மண்ணை பிரசாதமாக கொடுக்கும் கோயில் தெரியுமா?

பிரசாதம் என்றாலே புளியோதரை, சுண்டல்தான் நினைவுக்கு வரும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் மண்தான் பிரசாதம். 1880-ல் பிறந்து வாழ்ந்த அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதியான இவ்விடத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் இங்கு வழிபட்டால், குணமடைவார்களாம். பிரசாதமான புற்றுமண் & கருப்பு மையை உடலில் பூசினால், நோய்கள் விலகுமாம்.
News February 10, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் சவரனுக்கு ₹3,840 குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், நேற்று முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.10) காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $45 குறைந்து $5,011-ஆக உள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை இன்று குறைய வாய்ப்புள்ளது.
News February 10, 2026
பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: காங்.,

மக்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய உயரிய அமைப்பாக உள்ள நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகம் கட்டுப்படுத்துவதாக கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டினார். மாபெரும் தொகைகளை சேகரித்த மர்மமான PM CARES நிதி தொடர்பான கேள்விகளுக்கு, அவையிலேயே பிரதமர் பதிலளிக்க வேண்டும். இந்த நிதியின் விவரங்கள் குறித்து பிரதமர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


