News June 14, 2024

அமித் ஷா அறிவுரை தான் கூறினார்: தமிழிசை

image

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில், அமித் ஷா தனக்கு அறிவுரைதான் கூறினார் என தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தேர்தலின்போது சந்தித்த சவால்கள், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்தும் அவர் தன்னிடம் ஆலோசித்ததாக தமிழிசை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்ததால் தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக தகவல் வெளியானது.

Similar News

News September 11, 2025

நடிகை ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி

image

<<15081057>>குடும்ப வன்முறை வழக்கில்<<>>, பிரபல நடிகை ஹன்சிகாவின் மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியான முஸ்கான், தன் கணவன், மாமியாருடன் நாத்தனார் ஹன்சிகாவும் சேர்ந்து மனரீதியாக கொடுமைப் படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யும்படி ஹன்சிகா அளித்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ஹன்சிகா மற்றும் தாயார் ஜோதி இருவருக்கும் முன்ஜாமின் மட்டும் வழங்கியது.

News September 11, 2025

“Man of Steel” அல்ல “Man of Steal”: ஸ்டாலினை சாடிய தமிழிசை

image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய CM, ஸ்டாலின் என்ற பெயருக்கு “Man of Steel”(இரும்பு மனிதன்) என்று பொருள் என தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் “Man of Steel” என்று சொல்வதை தமிழ்நாட்டு மக்கள்”Man of Steal”(திருட்டு மனிதன்) என்றுதான் எடுத்துக் கொள்வார்கள் என தமிழிசை விமர்சித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

News September 11, 2025

உடலுறுப்பு தானம் செய்வோருக்கு கல்வெட்டு

image

மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உடலுறுப்பு தானம் செய்வோரின் பெயர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கல்வெட்டாக வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்டோர் உடலுறுப்பு தானம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!