News April 9, 2024

அமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல், பிரியங்கா போட்டி?

image

அமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல், பிரியங்கா போட்டியிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமேதியில் 2004, 2009, 2014இல் வெற்றிபெற்ற ராகுல் 2019இல் தோல்வி அடைந்தார். ரேபரேலியில் தொடர்ந்து 4 முறை வென்ற சோனியா, ராஜ்ய சபா எம்பியாகிவிட்டார். ராகுல் இந்த முறை வயநாட்டில் போட்டியிட்டாலும் கூடுதலாக அமேதியிலும், பிரியங்கா ரேபரேலியிலும் போட்டியிட வேண்டும் எனக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News February 4, 2026

25 ஆண்டுகளுக்கு பிறகு.. தேதியை அறிவித்தது ECI

image

பேரவைத் தேர்தல் பிப்ரவரி 3-வது வாரத்தில் நடைபெறும் என முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி டெல்லி பாரத் மண்டபத்தில் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தமிழகம் உள்பட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

News February 4, 2026

FLASH: இந்தியா அபார வெற்றி

image

U-19 WC தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆப்கன் நிர்ணயித்த 311 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 41.1 ஓவர்களில் எட்டியது. ஆரோன் ஜார்ஜ்(115) சதம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. சூர்யவன்ஷி(68), ஆயுஷ் மாத்ரே(52) இருவரும் அரைசதம் விளாசினர். இந்திய அணி 6-ஆம் தேதி பைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

News February 4, 2026

UPSC தேர்வு அட்டவணை வெளியானது

image

933 காலியிடங்களுக்கான UPSC CSE(Civil Services Exam) அட்டவணை வெளியாகியுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு வரும் மே 24-ம் தேதி நடைபெறுகிறது. வயது வரம்பு 21-32. விண்ணப்ப கட்டணம்: ₹100 (பெண்கள், SC/ST, மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு) விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு சான்றிதழ் விவரங்களுடன் <>upsconline.nic.in<<>> என்ற இணையதளத்தில் பிப்.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!