News March 21, 2025
அமெரிக்காவின் உயரமான மனிதர் காலமானார்

அமெரிக்காவின் உயரமான மனிதரும், முன்னாள் போலீசுமான ஜார்ஜ் பெல் (67) காலமானார். 7 அடி 8 அங்கும் உயரம் கொண்ட அவர், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி படம், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் வர்ஜீனியா காவல்துறையில் துணை செரீப்பாக பணிபுரிந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு வரை உலகின் உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் புரிந்திருந்தார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 26, 2025
SUMMER TIPS: ஏசி இல்லாமல் தூங்க முடியலையா?

1) தூங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பே அறையில் ஃபேனை ஓட விடுங்கள். ஃப்ரிட்ஜில் ஒரு பாத்திரத்தில் வைத்த தண்ணீரை, ஃபேனுக்கு கீழ் அல்லது ஜன்னலுக்கு அருகில் வையுங்கள். ரூம் ஜில்லென மாறும். 2) லைட்டான, வெப்பத்தை குறைக்கும் தரமான மெத்தையை வாங்குங்கள். 3) உடல் வெப்பநிலை குளிர்ந்தால்தான் தூக்கம் வரும். எனவே, தூங்கும் முன்பு குளியுங்கள். 4) இரவில் லைட்டான உணவை சாப்பிடுங்கள்.
News March 26, 2025
₹2000 ஆக குறைக்கிறது UPI

UPI அப்ளிகேஷன்களில் Collect Payment வசதியில் புதிய கட்டுப்பாடுகளை NPCI அறிமுகப்படுத்தவுள்ளது. இனி, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் தவிர மற்ற யாரும் ₹2000க்கு மேல் Collect Payment கொடுக்க முடியாது. பிராடுத்தனம் செய்யும் நபர்கள் இந்த சேவையை தவறாக பயன்படுத்துவதால், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
News March 26, 2025
ராம் சரணின் புதிய படம்.. நாளை ஃபர்ஸ்ட் லுக்

ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனையடுத்து ஆர்.சி. 16 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் அவர் நடத்த வருகிறார். புஜ்ஜி பாபு இயக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாக உள்ளது.