News July 11, 2025
ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
NDA கூட்டணியில் உள்ளோம்: ஜான் பாண்டியன்

அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இருக்கிறோம் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், கூட்டணியில் தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணிக்கு தங்களை அழைக்கவில்லை என்றும் அழைத்தால் அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்போம் எனவும் ஜான் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
News July 11, 2025
2027 ஆகஸ்டில் ஓய்வு.. ஜெகதீப் தன்கர் அறிவிப்பு

2027 ஆகஸ்டில் ஓய்வு பெற இருப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார். முன்னதாக, துணை ஜனாதிபதியாகும் முன்பு மே.வங்க ஆளுநராக தன்கர் பதவி வகித்தார். பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
News July 11, 2025
SK கொடுத்த ஷாக்!

‘குட் நைட்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சந்திரசேகரன் அடுத்து SK படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு SK பிரேக் போட்டுள்ளாராம். ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவருக்கு கதை சொல்ல, அதில் பயங்கர இம்ப்ரஸான SK, அந்த படத்தை முதலில் தொடங்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.