News April 2, 2025
அமெரிக்க டிவி நடிகை பேடி மலோனி காலமானார்

லிட்டில் ஹவுஸ் ஆன் பிரெய்ரர், ஸ்டார் வார்ஸ் ஹாலிடே ஸ்பெஷல் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களில் நடித்தவர் பேடி மலோனி. 2010ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவாலும், வயோதிகம் காரணமாகவும் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மலோனி (82) உயிரிழந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
தூத்துக்குடி: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 7, 2026
போருக்கு தயார்… அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!

டிரம்ப் நிர்ணயித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஈரான் அதிபர் பெசெஷ்கியன் ‘போருக்கு நாங்கள் தயார்’ என்று X-ல் பதிவிட்டுள்ளார். அதில், இந்த கணம் வரை நாட்டின் பாதுகாப்புக்காக உயிரையும் தியாகம் செய்ய 14 மில்லியன் ஈரானியர்கள் பெருமையோடு காத்திருப்பதாக கூறியுள்ள அவர், நாட்டுக்காக என் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவுடன் போரிட ஈரான் தயாராகி வருகிறது.
News April 7, 2026
மம்தா பாடம் எடுக்கவேண்டாம்: மாணிக்கம் தாகூர்

பாஜக உடன் திமுகவும், காங்கிரசும் ரகசிய கூட்டணி என்ற மம்தா பானர்ஜி குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா சமநிலையை இழந்து பேசுவதாக கூறிய அவர், பாஜகவிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என காங்கிரஸுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.


