News September 26, 2025
அமெரிக்கா இதை அனுமதிக்க வேண்டும்: இந்தியா

ஈரான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு USA-விடம் இந்தியா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு சமீபத்தில் USA சென்றது. அப்போது ரஷ்யா, ஈரான், வெனிசுலாவில் இருந்து ஒரே நேரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடைவிதித்தால், அது சர்வதேச அளவில் விலையேற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
Similar News
News September 27, 2025
ஞாபக மறதியா? இதோ சில டிப்ஸ்

ஞாபக மறதி இயல்பானவை என்றாலும், நினைவாற்றலை சிறந்த நிலையில் வைத்திருப்பது மிக முக்கியம். மூளை ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. சில அன்றாட பழக்கவழக்கங்கள் மூலம் நமது நினைவாற்றலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும். அவை என்னவென்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 27, 2025
TN, தெலங்கானா பின்தங்க இவர்களே காரணம்: ரிஜிஜு

தமிழக அரசின் <<17830323>>விழாவில்<<>> தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி, PM மோடியை விமர்சித்ததை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டித்துள்ளார். X-ல் சில விவரங்களுடன் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் PM மோடியை, விளையாட்டு வீரர்கள் முன் ரேவந்த் தவறாக பேசியுள்ளார். முன்பு விளையாட்டில் முன்னணியில் இருந்த தமிழகமும், தெலங்கானாவும் (ஆந்திரா), திமுக, காங்., ஆட்சியிலேயே சரிந்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.
News September 27, 2025
ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?

ஆண்களில் இருபாலின சேர்க்கை (Bi-sexual) மற்றும் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளோர் மீது அதிகமான பாலியல் கொடுமை இழைக்கப்படுவதாக அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை உறவுகளில் ஈடுபடுவோரில் பெண் தன்மைகளை வெளிப்படுத்தும் ஆண்கள் (உறவில் உட்படுபவராக இருப்பவர்கள்), வீடு, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது 61% அதிகமாக உள்ளதாம். ஆக, ஆண்களுக்கும் இப்போது பாதுகாப்பு இல்லை.