News August 15, 2025
இந்தியாவை வாழ்த்திய அமெரிக்கா, ரஷ்யா

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவியல், பொருளாதாரம் என பல துறைகளில் சாதித்து உலகளவில் மதிப்புமிக்க நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு மேலும் மேம்பட விரும்புவதாகவும் அவர் வாழ்த்தியுள்ளார். அதேபோல், உலகின் மிகப்பெரிய பெரிய ஜனநாயக நாட்டுடனான தங்களது உறவு மதிப்புமிக்கது என அமெரிக்காவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Similar News
News August 15, 2025
யானை – டிராகன் இணைய வேண்டிய நேரம்: சீனா

இந்தியாவும் (யானை), சீனாவும் (டிராகன்) இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டும் மிகப்பெரிய வளரும் நாடுகள் எனவும், இருநாட்டு வளர்ச்சிக்கும் இணைந்து பணியாற்றுவது தான் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்திய பொருள்களுக்கான அமெரிக்க வரிவிதிப்பு, PM மோடியின் சீன பயணங்களுக்கு மத்தியில் அந்நாடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
News August 15, 2025
கட்டணத்தை உயர்த்திய SBI

வங்கிக் கணக்கில் இருந்து IMPS டிரான்ஸ்பர் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ₹25,000 வரையான தொகைக்கு கட்டணம் இல்லை. ஆனால், ₹25,000 முதல் ₹1,00,000 வரை- ₹2+GST, ₹1,00,000 முதல் ₹2,00,000 வரை- ₹6+GST, ₹2,00,000 முதல் ₹5,00,000 வரை- ₹10+GST கட்டணம் இருக்கும். இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
News August 15, 2025
2050-ல் ₹1 கோடியின் மதிப்பு என்ன?

இன்று உங்கள் கையில் ₹1 கோடி இருந்தால், 2050-ல் அதன் மதிப்பு ₹29.53 லட்சத்திற்கு சமமாக இருக்கும். இன்று ₹1 கோடிக்கு கிடைக்கும் வீடு, 2050-ல் ₹3.4 கோடியாக இருக்கும். இதற்கு காரணம் பணவீக்கம். பொருட்களின் விலை அதிகரித்து மக்களின் வாங்கும் திறன் குறையும். கடந்த 20-25 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 6%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5% என்று தொடர்ந்தால் கூட மேற்கூறியதுதான் நடக்கும்.