News September 22, 2025
கடனில் தத்தளிக்கும் அமெரிக்கா

உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், அதுதான் உண்மை. பணக்கார தேசமாக இருந்தாலும், அந்நாட்டு அரசின் கடன் விண்ணைத் தாண்டி உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் கடனுக்கான வட்டியாக சுமார் ₹107 லட்சம் கோடி கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டு பட்ஜெட்டில் 15–18% ஆகும். அந்நாட்டின் மொத்த கடன் ₹3,294 லட்சம் கோடியாம். டாலர் ஆதிக்கம் குறைந்தால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
Similar News
News September 22, 2025
பள்ளியில் இருந்து ஒன்றாக விளையாடும் கில் – அபிஷேக்

நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில்(47), அபிஷேக் சர்மா(74) ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் இருந்து கில்லுடன் ஒன்றாக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் அபிஷேக்கும் குறிப்பிட்டார். இருவருக்கும் யுவராஜ் ஆலோசகராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 22, 2025
பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த போர்ச்சுகல்

இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி <<17787971>>UK, ஆஸ்திரேலியா, கனடா<<>> நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதற்கு கடும் கண்டனங்களை இஸ்ரேல் தெரிவிக்க, மறுபுறம் பாலஸ்தீன அரசு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. இந்நிலையில் போர்ச்சுகலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரான்ஸும் முறைப்படி பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 466
▶குறள்: செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
▶பொருள்: செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.