News August 9, 2024
முதலிடத்தில் அமெரிக்கா; 64 ஆவது இடத்தில் இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 15ஆவது நாளின் இறுதியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 64ஆவது இடத்தில் உள்ளது. ஒரு வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ள நிலையில், அமெரிக்கா (30), சீனா (29), ஆஸ்திரேலிய (18), பிரான்ஸ் (14), ஜெர்மனி (13) தங்கப் பதக்கங்களுடன் முறையே முதல் 5 இடங்களில் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு தங்கப்பதக்கத்தோடு 53ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News December 6, 2025
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது டவுட்டா?

பாஜகவில் நயினார், அண்ணாமலைக்கு இடையேயான மோதல் கொளுந்துவிட்டு எரிவதாக பேசப்படுகிறது. அண்ணாமலை தரப்பை பேஸ்மெண்ட்டோடு தகர்க்கும் பிளானில் இருக்கும் நயினார், தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவருகிறாராம். அத்துடன் வரும் தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கிடைக்கக்கூடாது என நயினார் தீர்க்கமாக இருப்பதாகவும், இதுகுறித்து டெல்லி பாஜகவிடம் அவர் பேசிவருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News December 6, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென மாறியது

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 6, 2025
45 வயது முதல் இனி பெண்களுக்கு Lower berth!

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ரயிலில் Lower Berth இருந்தால், அது தானாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், முன்பதிவில் கேட்காவிட்டாலும், Quota அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.


