News July 4, 2024

மக்களவை விதிகளில் திருத்தம்

image

மக்களவை உறுப்பினராக பதவியேற்கும்போது கோஷம் எழுப்புவதை தடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்களவை எம்பியாக பதவியேற்ற ஓவைசி, ஜெய் பாலஸ்தீனம் என கோஷம் எழுப்பியிருந்தார். மேலும் சில உறுப்பினர்கள், ஜெய் சம்விதான், ஜெய் ஹிந்துராஷ்டிரா என முழக்கமிட்டிருந்தனர். இதனால் சர்ச்சை எழுந்ததையடுத்து, மக்களவை சபாநாயகர் உத்தரவின்படி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News September 22, 2025

தி.மலைக்கு மழை எச்சரிக்கை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் இன்று (செப்.,22) மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை குறித்த புகார்களுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்! கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே!

News September 22, 2025

இரவில் செங்கோட்டையனுடன் சந்திப்பு

image

ஒன்றுபட்ட அதிமுகவிற்காக குரல் கொடுத்து வரும் செங்கோட்டையனை நேற்று இரவு EX MLA பாலகங்காதரன் உள்ளிட்ட OPS ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். ஓபிஎஸ் – செங்கோட்டையன் ஓரிரு நாள்களில் நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், இருதரப்பும் நேற்று ஆலோசனை செய்திருக்கின்றன. இதில், இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

News September 22, 2025

அஸ்வ சஞ்சலாசனம் செய்யும் முறை

image

முதுகுத்தண்டு வலுவடைய அஸ்வ சஞ்சலாசனம் செய்து பழகுங்கள் ➤விரிப்பில் நிற்கவும். ஒரு காலை முன்னோக்கி முட்டியை மடக்கியபடி வைக்கவும் ➤மற்றொரு காலை பின்னோக்கி எடுத்து சென்று, கால் முட்டி முதல் கால் விரல்கள் வரை தரையில் இருக்க வேண்டும் ➤கைகளை இடுப்புக்கு பின்புறம் வைக்கவும் ➤இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போன்று, காலை மாற்றி செய்யவும். SHARE.

error: Content is protected !!