News October 29, 2024
அம்பேத்கரின் பொன்மொழிகள்

*ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள் *ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற சொல்லை அழிக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை *தீண்டாமை அடிமைத்தனத்தை விட ஆபத்தானது. அது மதத்தை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் அடிமைப்படுத்துகிறது *சாதித் திமிறும் அதன் கோரப்பிடியும் அழிந்தால் தான் அரசியல், பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்படும்
Similar News
News April 26, 2025
5 திமுக அமைச்சர்களுக்கு நெருக்கடி

SC-ன் கெடுபிடியால் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. சர்ச்சை கருத்து பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கில் TN அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. துரைமுருகன், MRK பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. KN நேரு சகோதரருக்கு எதிரான வழக்கில் ED-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 5 அமைச்சர்களும் சிக்கலில் உள்ளனர்.
News April 26, 2025
மஞ்சள் படையின் பிளே ஆஃப் கனவு கலைந்தது?

7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசியாக இருக்கும் CSK-க்கு, பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த சீசனில் தொடக்கம் முதலே அந்த அணி சொதப்பி வருகிறது. எஞ்சி இருக்கும் 5 போட்டிகளில் வென்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம்தான். இதற்கு முன்பு 2020, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் லீக் சுற்றுடன் CSK நடையை கட்டி இருக்கிறது. இந்தாண்டும் அதேநிலை தொடர்கிறது. CSK-ன் சொதப்பலுக்கு காரணம் என்ன?
News April 26, 2025
சூப்பர் காம்போ.. ரீ-என்ட்ரி கொடுக்கிறார் அப்பாஸ்!

நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான அவர், கடைசியாக 2015-ல் பச்சகள்ளம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு சற்குணம் இயக்கத்தில் அவர் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் அதில் நடிக்கவுள்ளனராம். அப்பாஸ் நடித்ததில் உங்க ஃபேவரெட் படம் எது?