News December 21, 2024
இதையும் விட்டு வைக்காத அம்பானி

ரிலையன்ஸ் கால் வைக்காத துறையே இந்தியாவில் இல்லை எனலாம். விளையாட்டும் அதில் விதிவிலக்கல்ல. பணம் கொழிக்கும் ஐபிஎல், ஐசிஎல் அணிகளை வைத்துள்ள ரிலையன்ஸ், அடுத்து MMA-விலும் கால்பதிக்கப் போகிறது. அந்த வகையில் அதிக வியூவர்ஸ் கொண்ட இந்த விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், முன்னாள் உலக சாம்பியன் கானர் மெக்ரீகர்- யூடியூபர் லோகன் பால் மோதும் போட்டியை இந்தியாவில் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 5, 2025
என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன்: EPS

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை தொடங்கிவைத்த ஸ்டாலினிடம் ‘இபிஎஸ் வீட்டிற்கு செல்வீர்களா’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நிச்சயம் செல்வன் என்று பதிலளித்தார். இன்று இதுகுறித்து இபிஎஸ்ஸிடமும் செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்பினர். அதற்கு, என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
News July 5, 2025
நானே முதல்வர் வேட்பாளர்… அமித்ஷாவுக்கு இபிஎஸ் பதிலடி

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே பல முரண்பட்ட கருத்துகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் தேஜகூ ஆட்சியமைக்கும் எனக்கூறிய அமித்ஷா, முதல்வர் இபிஎஸ் தான் எனக் குறிப்பிடாதது சர்ச்சையானது. இந்நிலையில், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, தானே முதல்வர் வேட்பாளர் என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், அமித்ஷாவிற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
News July 5, 2025
மத்திய அரசில் 227 காலியிடங்கள்: ₹35,400 சம்பளம்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 227 Chargeman (Group B) காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹35,400 – 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 18-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <