News October 20, 2025
உலகளவில் முடங்கிய Amazon, Snapchat, Canva, OpenAI

அமேசான் வெப் சர்வீஸின் செயலிழப்பு காரணமாக, Snapchat, Canva, OpenAI, Perplexity உள்ளிட்ட செயலிகள் உலகளவில் முடங்கியுள்ளன. AWS சேவைகளில் Error rates அதிகரித்துள்ளதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக AWS தெரிவித்துள்ளது. Amazon, Prime Video, Spotify, Zoom மற்றும் Reddit உள்ளிட்ட சேவைகளும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
கண் பார்வை ஷார்ப்பா இருக்கனுமா? இத பண்ணுங்க!

கண்கள் நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு. ஆனால் நாம் இதற்கு சரியாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்நிலையில், கண்களை பாதுகாக்க டாக்டர்கள் சொல்லும் சில முக்கிய பழக்கங்கள் இதோ: *நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்பாடு கூடாது *கண்களை அதிகமாக தேய்க்காதீங்க *சன் கிளாஸ் போடுங்க *சரியான தூக்கம் ரொம்ப முக்கியம். கண்டிப்பா 7-8 மணி நேரம் தூங்குங்க *வருடத்திற்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்யுங்கள்.
News October 20, 2025
இந்தியாவுக்கு 200% வரி எச்சரிக்கை விடுத்தேன்: டிரம்ப்

இந்தியா – பாக்., மோதலை நான் நிறுத்தியதாக மீண்டும் டிரம்ப் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூரின் போது 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறிய அவர், இரு நாடுகளும் அணு ஆயுதப் போருக்கும் தயாரானதாக தெரிவித்தார். ஆனால், மோதல் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கும் 200% வரி விதிப்பேன் என்று எச்சரித்ததால், இருதரப்பும் மோதலை நிறுத்திக் கொண்டன என்றும் கூறினார். இதனை இந்தியா இதுவரை திட்டவட்டமாக மறுக்கிறது.
News October 20, 2025
BREAKING: விலை மளமளவென குறைந்தது

கார் வாங்க பிளான் பண்ணுறீங்களா? இதுதான் சரியான நேரம். தீபாவளியையொட்டி முன்னணி கம்பெனிகள் விலையை குறைத்துள்ளன. டாடா தனது டிகோர் செடான் காருக்கு ₹30,000 வரை தள்ளுபடி கொடுக்கிறது. ஹூண்டாய் ஆரா ₹43,000 வரையும், ஹோண்டா அமேஸ் புதிய மாடலுக்கு ₹68,000, பழைய மாடலுக்கு ₹98,000 வரையும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், வோக்ஸ்வேகன் விர்டஸ் ₹1.50 லட்சம், ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு ₹2.25 லட்சம் குறைகிறது. SHARE