News May 15, 2024
பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

ராஜஸ்தானுக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 144/9 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரியான் பராக் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அந்த அணி 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் சாம் கரண் 63 ரன்கள் எடுத்தார்.
Similar News
News January 9, 2026
பிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணிட்டாரே..!

பிக்பாஸ் 9-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டைட்டில் வின்னராவார் என எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத், அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். பணப் பெட்டி டாஸ்க் முடிந்துவிட்டதாகவும், ₹18 லட்சத்துடன் அவர் வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சபரி, திவ்யா, சாண்ட்ரா, அரோரா, விக்ரம் ஆகியோா் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. கானா வினோத்தை மிஸ் பண்ணுறவங்க ஒரு லைக் போடுங்க!
News January 9, 2026
பினராயி விஜயன் ‘சத்யாகிரகப் போராட்டம்’

கேரளாவிற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய பாஜக அரசு ‘நிதித் தடைகளை’ விதிப்பதாக கேரள CM பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, இதற்கு எதிராக ஜன.12-ம் தேதி மாபெரும் ‘சத்யாகிரகப் போராட்டம்’ நடத்தப்போவதாக அறிவித்து, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்திருக்கிறார். இந்த அறப்போராட்டத்தில் கேரள மாநில அமைச்சர்கள், இடதுசாரி MLA-க்கள், MP-க்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
News January 9, 2026
கணவன்/மனைவி கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்களா?

வார்த்தைகளுக்கு நெஞ்சை பிளக்கும் அளவிற்கு சக்தி உண்டு. அதுவும் நமக்கு பிடித்தவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் கூரிய அம்பினை போன்றவை. அவர்கள் நம்மை தகாத வார்த்தைகளால் திட்டினால், அந்த நாளே மோசமானதாக மாறிவிடும். அப்போது, உங்கள் மனநிலையை உடனடியாக எடுத்து சொல்லி உங்கள் கணவன்/மனைவியை தடுத்து நிறுத்துங்கள். எவ்வளவு சண்டை வந்தாலும் தம்பதிகள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது அவசியம்.


