News September 24, 2025
WhatsApp-ல் வரும் அசத்தலான அப்டேட்..

பயனர்களின் வசதிக்காக WhatsApp தற்போது ‘Translate’ என்னும் புது வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. மெசேஜ்கள் வேறு மொழியில் வந்தாலும், அதை தேவையான மொழியில் ‘Translate’ செய்யலாம். ஆண்ட்ராய்டு போன்களில் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் இச்சேவை வழங்கப்படும் நிலையில், விரைவில் தமிழும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், iOS-ல் 19 மொழிகளில் இச்சேவை கிடைக்குமென தகவல் வெளிவந்துள்ளது.
Similar News
News September 24, 2025
எந்த பிரச்சனைக்கு என்ன சாப்பிடலாம்?

சில பொதுவான பிரச்னைகளுக்கு நமது அன்றாட உணவு மூலம் தீர்வு காணலாம். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நீண்ட நாள் நலமாக வாழ வழிவகை செய்கிறது. எந்த பிரச்சனைக்கு என்ன உட்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 24, 2025
Sports Roundup: சிட்னி தண்டர் அணியில் அஷ்வின்

*பிக்பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அஷ்வின் விளையாடுவார் எனத் தகவல். * ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 907 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடர்கிறார். * ஆஸி., A அணிக்கு எதிரான 2-வது அன் அபிசியல் டெஸ்டில் படிக்கல், ஜூரெல், நிதிஷ் ரெட்டி தலா 1 ரன்னுக்கு அவுட். *மகளிர் ஸ்பீட் கிளைம்பிங் போட்டியில், ஜோகா பூர்டி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
News September 24, 2025
கேட்பாரற்று கிடக்கும் ₹67,000 கோடி: திருப்பி தர நடவடிக்கை

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,000 கோடி வைப்பு நிதியை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க RBI அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் இது தொடர்பான விழிப்புணர்வை பயனாளர்களுக்கு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாமலோ அல்லது செலுத்தப்படாமலோ இருந்தால், அவை உரிமைக் கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படும்.