News September 15, 2025
உடல் எடையை குறைக்க உதவும் அற்புதமான காலை உணவுகள்

உடல் ஆரோக்கியத்துக்கு காலை உணவு மிகவும் அவசியமானது. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் வெயிட் லாஸ் செய்யவேண்டும் என காலை உணவை தவிர்க்கின்றனர். அப்படி செய்வது சில சமயங்களில் வேறு சில பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால், குறைந்த கலோரிகளில் உள்ள சத்தான உணவுகளை காலையில் நீங்கள் உட்கொள்ளலாம். அது என்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க SHARE பண்ணுங்க.
Similar News
News September 15, 2025
மூலிகை: ஆமணக்கும் அற்புத மருத்துவ குணங்களும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
◆ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது.
மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
◆கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளியை கண்களில் விட குணமாகும்.
◆ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் எடுத்து கொண்டால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.
News September 15, 2025
அரசு பள்ளிகளில் வருகிறது AI ரோபோட்டிக்ஸ் Labs

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் ₹15 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாடவேளைகளில் AI, ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் நடைபெறும்.
News September 15, 2025
தமிழகம் முழுவதும் விலை குறைகிறது

TN வளர்ச்சிக்கான GST சீர்திருத்தங்கள் குறித்த GST 2.O புத்தகத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். டிராக்டருக்கு ₹42,000 வரையும், ₹1 லட்சம் மதிப்பிலான டூவிலருக்கு ₹10,000 வரையும், ஆட்டோக்களுக்கு ₹30,000 வரையும் சேமிக்கலாம். குறிப்பேடுகள் ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ₹850 வரை பெற்றோரால் சேமிக்க முடியும். TV-க்கு ₹4,000, AC-க்கு ₹3,500, ஹீட்டருக்கு ₹7,000 வரையும் விலை குறையும்.