News September 2, 2025
ரயில்வே ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு

தங்களது சம்பள வங்கிக் கணக்கை SBI-ல் வைத்திருப்பவர்களுக்கு அசத்தலான அறிவிப்பை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. SBI Salary Account வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கான விபத்து காப்பீடாக ₹1 கோடி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரயில்வே கையெழுத்திட்டுள்ளது. இதற்கு ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இது முந்தைய காப்பீட்டை விட மிகவும் அதிகமாகும்.
Similar News
News September 2, 2025
தமிழகத்தில் தொடங்கியது தேர்தல் ஃபீவர்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. இதற்காக முதற்கட்டமாக, பெரம்பலூருக்கு 180 மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களை பெரம்பலூர் ஆட்சியர் மிருணாளினி ஆய்வுசெய்தார். இதன்பிறகு வாக்கு இயந்திரங்கள், கிடங்கில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
News September 2, 2025
BJP தலைவராக இருக்க இதுதான் தகுதியா? TRB ராஜா காட்டம்

CM ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து <<17586070>>நயினார் நாகேந்திரன்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா என அமைச்சர் TRB ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உள்ள தமிழகம் குறித்த உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுங்கள் எனவும் கூறியுள்ளார்.
News September 2, 2025
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: IMD

வடக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD கணித்துள்ளது.