News August 5, 2024

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

image

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால், தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, அச்சாலை மூடியிருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், பனிலிங்க தரிசனம் செய்யமுடியாமல், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இமாச்சலில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட சிம்லா, குலு மாவட்டங்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News March 24, 2026

அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி இல்லை: EPS

image

தமாகா, IJK, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு நாளை இறுதிசெய்யப்படும் என EPS கூறியுள்ளார். கூட்டணிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வருவாரா என்ற கேள்விக்கு, பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், அதனால் அவர் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை எனவும் EPS திட்டவட்டமாக தெரிவித்தார். இன்னும், சில நாள்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

News March 24, 2026

கட்டண உயர்வால் குமுறும் ’ஆன்லைன் உணவு பிரியர்கள்’

image

<<19434398>>Zomato-வைத் தொடர்ந்து<<>>, Swiggy-யும் தனது பிளாட்பார்ம் கட்டணத்தை ஒரு டெலிவரிக்கு ₹14.99-லிருந்து ₹17.58-ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்நடவடிக்கையால், Swiggy-யில் இனி ஆர்டர் செய்வதையே நிறுத்திவிடுவோம் என வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். உங்கள் ரியாக்சன் என்ன?

News March 24, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்.1-ம் தேதி முழு ஆண்டுத் தேர்வும் தொடங்கவிருப்பதால் விடுமுறை கிடைக்குமா என்று பள்ளி மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. SHARE IT

error: Content is protected !!