News August 11, 2024
அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஜூன் 29ஆம் தேதி முதல் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரான பின்பு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 6, 2026
UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

தமிழக தேர்தல் தேதி மார்ச் 13-ல் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், 10 – 15-க்குள் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்தவும் ECI திட்டமிட்டுள்ளது. மேலும், மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 6, 2026
அணு ஆயுத போர்.. எஸ்கேப் பிளான் வைத்திருக்கும் டிரம்ப்

அணு ஆயுத போர் வெடித்தால் அதிலிருந்து தப்ப டிரம்ப் ஒரு பிளானை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அணுகுண்டு தாக்குதலை தாங்கும் அளவிற்கு USA-ல் 3 சீக்ரெட் பங்கர்கள் இருக்கிறதாம். 2-ம் உலகப்போருக்கு பிறகு கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த பங்கர்களை டிரம்ப் தற்கால வசதிகளுடன் அப்டேட் செய்து வைத்திருக்கிறாராம். போர் நேரத்தில் பங்கரில் இருந்தபடியே உத்தரவு வழங்கும் வசதிகளும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

<<19309113>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி விலையும் இன்று (மார்ச் 6) குறைந்துள்ளது. 1 கிராம் ₹5 குறைந்து ₹290-க்கும், 1 கிலோ ₹5,000 குறைந்து ₹2.9 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


