News November 17, 2024

3-வது வாரத்தில் லியோ, கோட் படங்களை முந்திய அமரன்

image

SK நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் பிளாக்பஸ்டர் ஹிட் படமாகியுள்ளது. இதுவரை சுமார் ரூ.280 கோடி வசூலை படம் நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படும் சூழலில், தற்போது விஜய் படங்களின் சாதனையை அமரன் முறியடித்துள்ளது. 3-வார வெள்ளிக்கிழமையில் லியோ – 61.4K டிக்கெட்டுகளும், கோட் – 54.95K டிக்கெட்டுகளும் விற்றது. இதனை முறியடித்து அமரனுக்கு 115.05K டிக்கெட்டுகள் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 28, 2025

BREAKING: மாறியது தங்கம் விலை..

image

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹75,240-க்கும், கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹9,405-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ₹1,800 அதிகரித்துள்ளது.

News August 28, 2025

₹10,000 கோடியை இழக்கும் விளம்பரத் துறை

image

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவால் முக்கிய ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து ரத்தாகி வருகின்றன. அத்துடன், இதுபோன்ற கேமிங் நிறுவன விளம்பரங்களில் நடித்துவந்த கங்குலி, தோனி, கில் உள்ளிட்டோரும், கோடிக்கணக்கில் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், கேமிங் தொடர்பான விளம்பரத் துறை ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ₹8,000 – ₹10,000 கோடியை இழக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

News August 28, 2025

வரி விவகாரம்: இந்தியாவுக்கு வாய்ப்பு கொடுத்த USA..

image

இந்தியா மீதான USA-வின் 50% வரி விதிப்பு நேற்று (ஆக.27) அமலுக்கு வந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அறிவித்துள்ளார். இதனை இந்தியா ஏற்று, ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!