News April 26, 2024
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘அமரன்’

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் உருவாக்கி வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
இன்று இரவு 7 மணிக்கு தயாரா இருங்க!

சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ள படத்தில், வித்யூத் ஜம்வால் வில்லனாக மிரட்டவுள்ளார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று சென்னை தனியார் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
News August 24, 2025
இனி வானவில் பார்க்கமுடியாதா? ஆய்வில் பகீர்

இந்தியாவில் இனி வானவில்லை பார்ப்பது அரிது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் தற்போது ஆண்டுக்கு 117 வானவில் நாள்கள் உள்ள நிலையில், 2,100-க்குள் இது 4–5% அதிகரிக்குமாம். ஆனாலும், காலநிலை மாற்றத்தால் மக்கள் வசிக்கும் இடங்களில் வானவில் தோன்றுவது குறையும் எனவும், இமயமலை போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போ கடைசியா வானவில் பார்த்தீங்க?
News August 24, 2025
பூஜையில் வாழைப்பழமும், தேங்காயும் இருக்கும் ரகசியம்!

முக்தி அடையும் நிலையுடன் ஒப்பிடப்படுவதால் வாழைப்பழமும், தேங்காயும் கடவுள் வழிபட்டால் இடம் பெறுகின்றன. வாழைப்பழ தோலை தூக்கி போட்டால், வாழைமரம் முளைக்காது. அதே போலதான், தேங்காயும். அதன் ஓட்டை வீசினால், எதுவும் முளைக்காது. உரிக்காத முழுத் தேங்காயில் இருந்துதான் தென்னங்கன்று வரும். நாமும் கடவுள் வழிபாட்டிற்கு பிறகு முக்தி அடைய வேண்டும் என்ற காரணத்தால் தான், இந்த வழிமுறை.