News January 6, 2025
‘அமரன்’ இயக்குநரின் அடுத்த Pan India படம்!

அமரன் படத்தின் வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மீது பான் இந்தியா அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான T-Series உடன் கை கோர்க்கிறார் ராஜ்குமார். இதற்கான அறிவிப்பை தயாரிப்பாளர் பூஷண் குமார் வெளியிட்டுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் D55 பட வேலைகளில் உள்ளார் ராஜ்குமார். T-Series உடனான படம் Pan India படமாக உருவாகவுள்ளது. ஹீரோ யார் என விவரம் வெளியாகவில்லை.
Similar News
News January 20, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $65.14 உயர்ந்து $4,661.41-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $3.06 உயர்ந்து $93.19 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.20) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
கோயிலுக்குச் செல்லும் பொழுது..

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.
News January 20, 2026
போராட்டத்தை முடித்து வைங்க: நயினார்

<<18902841>>சத்துணவு ஊழியர்களுடன்<<>> பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போராட்டம் அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என்றும், போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்ஃஃ.


