News April 8, 2025
‘D 55’ பட கதையை சொன்ன ‘அமரன்’ இயக்குநர்

நமது அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக்கூடிய பலரை பற்றிய கதைதான் ‘தனுஷ் 55’ படத்தின் கதை என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை எனவும், நம் வாழ்க்கை இயல்பாக இயங்க முக்கிய காரணமே இவர்கள்தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இன்னும் 6 மாதங்களில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. சென்னை, விருதுநகர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.
News April 17, 2025
மாநில சுயாட்சி இதற்குத்தான் தேவை: CM ஸ்டாலின்

மாநில சுயாட்சி ஏன் அவசியம் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை முடக்கப் பார்க்கிறது எனவும், மாநிலங்களின் மொழி, கலாசாரங்களை அழிக்கப் பார்ப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில சுயாட்சி உரிமைகளை பாதுகாக்க அண்மையில் அவர் குழு அமைத்திருந்தார்.
News April 17, 2025
துப்பாக்கிச் சுடுதல்: பதக்க வேட்டையில் இந்தியா..!

பெருவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளினர். மகளிருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே பிரிவில், 242.3 புள்ளிகள் உடன் மனு பாக்கர் வெள்ளி வென்றார். ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.