News December 5, 2024
‘தி கோட்’ சாதனையை நெருங்கும் அமரன்

‘அமரன்’ திரைப்படத்தை தியேட்டர்களில் மட்டும் 1 கோடி பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் அதிகம் பேர் தியேட்டரில் பார்த்த படங்களின் பட்டியலில் இப்படம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. ‘தி கோட்’ படத்தை இதைவிட கூடுதலாக சில லட்சம் பேர் பார்த்துள்ளனர். ‘அமரன்’ படம் நெட்ஃபிலிக்ஸில் நாளை வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனின் சினிமா கரியரில் முக்கியமான படமாக இது அமைந்துள்ளது.
Similar News
News April 29, 2025
அஃப்ரிடிக்கு தரமான பதிலடி கொடுத்த தவான்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு குறைபாடே பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்ற அஃப்ரிடிக்கு ஷிகர் தவான் பதிலடி கொடுத்துள்ளார். தங்களுடைய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்வதாகவும், ஏற்கனவே கார்கில் போரில் உங்களை தோற்கடித்தாகிவிட்டது, இன்னும் எவ்வளவுதான் கீழே செல்வீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மற்ற நாடுகள் குறித்து பேசாமல் சொந்த நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடவும் அறிவுறுத்தியுள்ளார்.
News April 29, 2025
அட்சய திருதியை நல்ல நேரம் எப்போது?

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நன்மை என்று நமக்கு தெரியும். ஆனால், எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பது தெரியுமா? நாளை (29.04.2025) மாலை 5.31 மணி முதல் 30.04.2025 மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. அதில், புதன்கிழமை (30.04.2025) அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். அப்போது தங்கம் வாங்கினால், வாழ்வில் இன்பம் பெருகும்.
News April 29, 2025
PAK-கிற்கு வந்த துருக்கி ஆயுதங்கள்?

இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.