News August 8, 2024
அமன் ஷெராவத் அரையிறுதியில் தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அமன் ஷெராவத் தோல்வி அடைந்தார். அரையிறுதி போட்டியில் ஜப்பானின் முதல் நிலை வீரரான ரெய் ஹிகுச்சியுடன் அவர் மோதினார். இதில், 0-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்த அமன், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நாளை நடைபெறவுள்ளது.
Similar News
News November 24, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க
News November 24, 2025
மழை வரப்போகுதா? இதை வைத்து கண்டுபிடிக்கலாம்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவது மழைக்கான அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் காற்று மேகக் கூட்டத்தை கலைத்துவிடும். ஆனால், மழை வருவதை எளிதாக தெரிந்துகொள்ள சில உயிரினங்கள் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. அதன்படி, மழை வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கபடியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டாக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதல் பாதியில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2-ம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனை மகளிருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.


