News March 21, 2024
இரட்டை குழந்தைகளுக்கு தாயாகும் அமலாபால்?

பிரபல நடிகை அமலாபாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், மகிழ்ச்சியான 2 குழந்தைகள் எனப் பதிவிட்டுள்ளார். இதனால் அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க உள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக ஜகத் தேசாய் என்பவரை 2ஆவது திருமணம் செய்த அமலாபால், சமீபத்தில் தாயாகப் போவதாக தெரிவித்திருந்தார்.
Similar News
News January 5, 2026
சிவகாசி: சிறுமிக்கு பிறந்த குழந்தை; இளைஞருக்கு வலை

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக ஊர்நல அலுவலர் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிமாலா நடத்திய விசாரணையில், 17 வயது சிறுமிக்கும் கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை, அந்த தொழிலாளி பல முறை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News January 5, 2026
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரும் தெரியாதா?

ஆதார் கார்டு இல்லாமல் எந்த அரசு சேவையையும் பெற முடியாது. இந்நிலையில், ஆதார் கார்டும் தொலைந்துவிட்டது, 12 இலக்க நம்பரும் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அதற்கு, UIDAI இணையதளம் சென்று, Aadhaar Service-ஐ தேர்வு செய்யவும். அதில் Retrieve Aadhar ஆப்ஷனை கிளிக் செய்து, அங்கு உங்களின் பெயர், மொபைல் நம்பர், முகவரி விவரங்களை உள்ளிட்டால், உங்களின் ஆதார் கார்டு எண் கிடைக்கும். SHARE IT!
News January 5, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹8,640 உயர்ந்தது

ஆபரணத் <<18766340>>தங்கம் <<>>சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை விலை எதிரொலியால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை தாறுமாறாக உயரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


