News April 16, 2025
ஆபாச படத்தால் துன்பம்.. அமலாபால் கண்ணீர்

ஆபாச படத்தால் தாம் மிகவும் துன்பம் அனுபவித்ததாக நடிகை அமலாபால் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படம், மருமகள், மாமனார் இடையேயான திருமணத்தை மீறிய உறவு குறித்ததாகும். இந்தப் படத்தில் தாம் நடித்தற்காக தனது தந்தையும், குடும்பத்தினரும் மிகவும் வருத்தப்பட்டதாக அமலாபால் கூறியுள்ளார்.
Similar News
News April 16, 2025
வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
News April 16, 2025
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைப்பு அமலுக்கு வந்தது

கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (SBI ) அடிப்படை 25 புள்ளிகள் குறைப்பதாக அறிவித்து இருந்தது. இதனால் அந்த வங்கியில் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியோர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டியை அடிப்படை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
News April 16, 2025
தோனி ஒரு பாகுபலி: ஹர்பஜன் சிங்

CSK கேப்டன் தோனியை முன்னாள் CSK வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். தோனி ஒரு பாகுபலி எனக் குறிப்பிட்ட அவர், லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவர் சரியான இடத்தில் பேட்டிங் செய்து அசத்தலாக விளையாடியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். CSK-க்கு தோனி கேப்டனாக வந்ததும் அனைத்தும் மாறிவிட்டது என்றும், தோனி இருக்கும்போது அனைத்தும் சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.