News April 2, 2025
ஜிவி டைவர்ஸுக்கு நான் காரணமா? நடிகை விளக்கம்

ஜிவியின் டைவர்ஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நடிகருடன், குறிப்பாக திருமணமான ஆணுடன் நிச்சயமாக டேட்டிங் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்ததால் ஜிவிக்கு டைவர்ஸ் ஆனதாக பலரும் பேசிவருகின்றனர்.
Similar News
News April 3, 2025
அடுத்தடுத்த சந்திப்பு.. தொடரும் குழப்பம்

அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என அதிமுக தரப்பில் மறுத்தாலும், ஆமாம் பேசி வருகிறோம் என அமித்ஷா தடாலடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், 2ஆம் கட்டத் தலைவர்களான C.V.சண்முகம் அமித்ஷாவையும், தம்பிதுரை நிர்மலா சீதாராமனையும் சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
News April 3, 2025
அதிகாலை முதலே கனமழை.. விடுமுறை கேட்கும் மாணவர்கள்!

சென்னை, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்குகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, மழை காரணமாக வெளியே செல்ல முடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கேட்டு சோஷியல் மீடியாவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வரை எந்த மாவட்டத்திற்கும் லீவு விடப்படவில்லை.
News April 3, 2025
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.