News August 25, 2025
திமுகவில் இணைகிறேனா? செல்லூர் ராஜு ஓபன் டாக்

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது செல்லூர் ராஜுவை, EPS தனது காரில் ஏற்க மறுத்த வீடியோ வைரலாகி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் திமுகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள செல்லூர் ராஜு, பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டின் படியே தான் EPS காரில் ஏறவில்லை என்றார். மேலும், திமுகவில் தான் இணையவுள்ளதாக வெளியான தகவலில் கடுகளவும் உண்மையில்லை என்றார்.
Similar News
News August 25, 2025
Chewing gum விரும்பியா நீங்கள்? உயிருக்கே ஆபத்து..!

சாதாரண Chewing Gum-ஆல் உயிருக்கே ஆபத்து வரலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? 1 கிராம் chewing gum-ல் சுமார் 100-600 மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதாக Journal of national medicine-ன் ஆய்வுகள் கூறியுள்ளது. இது, நுரையீரல், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துமாம். ஏற்கெனவே, 1 ஆண்டுக்கு சராசரியாக 39,000-52,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஒரு மனிதனின் உடலுக்குள் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.
News August 25, 2025
ராம் சரணுக்கு No சொன்ன ஸ்வாசிகா

‘லப்பர் பந்து’ படம் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்வாசிகா. இவர் ‘பெத்தி’ என்ற தெலுங்கு படத்தில் ராம் சரணின் அம்மாவாக நடிப்பதற்கு மறுத்துவிட்டார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ராம் சரணுக்கு அம்மாவாக நடிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை, அதற்கான நேரம் வரும்போது நடிப்பேன் என்றார். ராம் சரணுக்கு 40 வயது ஆகும் நிலையில், ஸ்வாசிகாவுக்கு 34 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 25, 2025
அனுராக் தாகூர் கண்டுபிடிப்பு சாதாரண விசயமல்ல: சு.வெ

அனுமன்தான் முதல் முதலில் விண்வெளிக்கு போனது என்று <<17507921>>அனுராக் <<>>தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல என்று சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது என கிண்டலடித்த அவர், நீல் ஆம்ஸ்ட்ராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்கும் சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.