News March 31, 2025
உடற்சூடு தணிக்கும் கற்றாழை

கற்றாழை ஜூஸ் குடித்தால் பின்வரும் பலன்கள் கிடைக்கும்: * உடல் வெப்பத்தைத் தணியும் *நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் *மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும் *கண்களில் எரிச்சலைப் போக்கும் *வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும். *வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் *மலச்சிக்கல் நீங்க உதவும்.
Similar News
News April 2, 2025
ட்ரம்புக்கு எதிராக 25 மணி நேரம் பேசிய எம்.பி.

அமெரிக்க செனட் சபையில் அதிபர் டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி எம்.பி. கோரி புக்கர் 25 நேரம் பேசி அரங்கத்தை அதிர வைத்தார். டிரம்பின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அதிரடியான கருத்துகளை அவர் முன் வைத்தார். செனட் சபை வரலாற்றில் அதிக நேரம் பேசிய ஸ்ட்ரோம் தர்மண்ட் சாதனையை கோரி முறியடித்துள்ளார். 1957ல் செனட் சபையில் 24 மணி நேரம் 18 நிமிடங்கள் ஸ்ட்ரோம் பேசியிருந்தார்.
News April 2, 2025
காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ₹12க்கு விற்கப்பட்ட ஒரு தக்காளி தற்போது ₹24க்கும், வெங்காயம் ₹5 உயர்ந்து ₹25க்கும், உதகை கேரட் ₹15 உயர்ந்து ₹50க்கும், பீன்ஸ் ₹20 உயர்ந்து ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மாநில முழுவதும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட மறுநாளே விலையும் அதிகரித்துள்ளது.
News April 2, 2025
கச்சத்தீவை பெற இன்று தனித் தீர்மானம்

கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.