News December 23, 2024

ஸ்ரீதேஜுக்கு அறக்கட்டளை தொடங்கிய அல்லு அர்ஜுன்?

image

சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் ஸ்ரீதேஜுக்காக அல்லு அர்ஜுன் அறக்கட்டளை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன், சுகுமார் மற்றும் மைத்ரி பட தயாரிப்பாளர்கள் இணைந்து சுமார் ரூ. 2 கோடியை அறக்கட்டளையில் டெபாசிட் செய்ய உள்ளனர். இந்த தொகையை அவரது மருத்துவ மற்றும் எதிர்காலத்திற்காக செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News July 6, 2025

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.

News July 6, 2025

இந்த மெயில் உங்களுக்கும் வருகிறதா?

image

‘Download e-PAN Card’ என உங்களுக்கு இமெயில் வருகிறதா? அதனை நம்ப வேண்டாம் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்தவொரு மெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்திட வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

கூலி படத்தால் 2 வருடங்கள் காலி: லோகேஷ்

image

‘கடந்த 2 ஆண்டுகளாக தான் ‘கூலி’ படத்திற்காக மட்டுமே வேலை செய்தேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த 2 வருடங்களில் நண்பர்கள், ஃபேமிலி என எதுவுமே இல்லை என்றார். தனது 36 & 37 வயது இதிலே சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆக.14-ல் வெளியாகிறது.

error: Content is protected !!