News December 31, 2024

வசூல் நாயகன் அல்லு அர்ஜுன்

image

சுகுமார்-அல்லு அர்ஜுன் கூட்டணியில் டிச.5ஆம் தேதி வெளியான ‘புஷ்பா 2 தி ரூல்’ பெயருக்கு ஏற்ப இந்திய சினிமாவை ரூல் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான 25 நாட்களில் உலக அளவில் ரூ.1,760 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என அல்லு அர்ஜுன் தன்னை நிரூபித்துள்ளார்.

Similar News

News July 11, 2025

குடும்பம் முக்கியம்தான்; ஆனால்.. கம்பீர் பதில்

image

சுற்றுப்பயணத்தின்போது கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தை அழைத்துச் செல்வது தொடர்பாக BCCI வெளியிட்ட புதிய விதிகளுக்கு கோலி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கம்பீர், குடும்பம் முக்கியம்தான்; ஆனால் இங்கு நீங்கள் வந்திருக்கும் காரணம் வேறு என கூறியுள்ளார். ஒரு டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் குறைவான நபர்களுக்குத்தான் நாட்டையே பெருமைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

News July 11, 2025

வைகோ நன்றி மறக்கக்கூடாது: ஜெயக்குமார்

image

வைகோ நன்றி மறக்கக்கூடாது என்று D ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என வைகோ பேசியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு அவர் வந்தபோது 5 சீட் கொடுக்கப்பட்டு 3 எம்பிக்கள் நாடாளுமன்றம் சென்றதாக குறிப்பிட்டார். எனவே, மறைந்த ஒரு தலைவரை இழிவுபடுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

News July 11, 2025

மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

image

கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கூறிய PS ஸ்ரீராமனின் கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளானது. இதனிடையே, இவரிடம் 3-ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதன் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். எனவே தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!