News December 21, 2024
அல்லு அர்ஜுன் தான் காரணம்: தெலங்கானா CM விளாசல்

போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே, ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
கண் பார்வைக்கு கேரட்டை விட இது பெஸ்ட்

கண் பார்வைக்கு இந்த 5 உணவுகளை நீங்கள் உணவில் சேர்ந்தால் போதும் மக்களே. *எல்லா வகையான கீரைகளும் கண்ணுக்கு நல்லது *மத்தி உள்ளிட்ட கொழுப்பு அதிகமுள்ள மீன்களை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும் *நட்ஸ் பார்வையை மேம்படுத்த உதவும் *கட்டாயம் உங்கள் உணவில் முட்டையை சேர்க்க வேண்டும் *ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் கொண்ட உணவுகள் கண்ணுக்கு சிறந்தது. நல்லா சாப்பிடுங்க கண் பத்திரம்…
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
‘MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்க’

50 கிலோ வாட் வரை கட்டண உயர்வில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறு நிறுவனங்கள் 120 கிலோ வாட் வரை பயன்படுத்துவதால் இந்த அறிவிப்பு உதவாது என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் தெரிவித்தன. கோவையில் பேட்டியளித்த இந்த அமைப்பினர், MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சூரிய மின்சக்தி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.