News March 18, 2024

மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு

image

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், ஒரு தொகுதி தான் திமுக ஒதுக்கியது. இதனால், விரும்பிய தொகுதியை வழங்க வேண்டும் என மதிமுக பிடிவாதமாக கூறியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதி, தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

யார் இந்த மனோஜ் பாண்டியன் ?

image

MGR ஆட்சிக் காலத்தில் 1985-89 வரை சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியனின் மகன் தான், <<18194000>>மனோஜ் பாண்டியன்<<>>. பி.ஹெச்.பாண்டியன் தனது அரசியல் பலத்தால், 1993-ல் மனோஜ் பாண்டியனை அரசியலுக்கு கொண்டு வந்தார். அவரும் ஜெ.,வின் அன்பை பெற்று பல முக்கிய பொறுப்புகளை பெற்றார். 2001-ல் சேரன்மகாதேவியிலும், 2021-ல் ஆலங்குளத்திலும் போட்டியிட்டு MLA-வாக தேர்வானார். இதற்கிடையில், 2010-16 வரை ராஜ்யசபா MP-ஆகவும் இருந்தார்.

News November 4, 2025

வங்கியில் 750 காலியிடங்கள்: ₹48,480 சம்பளம்!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது: 20- 30 ★சம்பளம்: ₹48,480- ₹85,920 ★தேர்ச்சி முறை: Online Written Test, Local Language Proficiency Test & Personal Interview ★விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23 ★முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

News November 4, 2025

ஐடி கார்டு இல்லையென்றால் அனுமதியில்லை: தவெக

image

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!