News March 18, 2024
சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.
Similar News
News January 31, 2026
சிவகங்கை: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <
News January 31, 2026
சிவகங்கை: பாஜக-வினருக்கு காந்தியை பிடிக்காது – முதல்வர்

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது, கிராமப்புறங்களில் முதுகெலும்பான 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு காலி செய்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 65 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. பாஜகவினருக்கு காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது என பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
News January 31, 2026
சிவகங்கை: புதிய சட்டக்கல்லூரி முதல்வர் திறப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்து கல்லூரியை பார்வையிட்டார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் எம்பி, சிவகங்கை எம்பி, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


